துபாய்- மதுரை விமானத்தில் கடத்திய ரூ.11.64 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல்


பறிமுதல் செய்யப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

மதுரை: துபாயிலிருந்து மதுரை வந்த பயணியிடம் ரூ. 11. 64 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாய்- மதுரை இடையிலான ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று (மார்ச் 25) மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் பயணித்தவர்களிடம் சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனை நடத்தினர். ஒரு பயணியிடம் ரூ. 11, 64,000 மதிப்புள்ள ட்ரோன் கேமராக்கள், லேப்-டாப்கள், மொபைல் போன்கள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அனுமதியின்றியும், உரிய பில்கள் இல்லாமல் பொருட்களை கடத்திய அந்த பயணியிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

x