பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் போக்சோவில் கைது


கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமார்

திருப்பூர்: தேர்வு அறையில் பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட திருப்பூர் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் இன்று (மார்ச் 25) கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் வெங்கமேடு வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று நடந்தன. இந்த மையத்தில் பல்வேறு தனியார் பள்ளி மாணவிகள் வந்து தேர்வு எழுதினர். அங்கு அம்மாபாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமார் (34) என்பவர் தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த தேர்வு அறையில் 6 மாணவிகள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனராம். அப்போது மாணவிகளை தேர்வு எழுத இடையூறு ஏற்படுத்தும் வகையில், அருகில் சென்று அவ்வப்போது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தேர்வு முடிந்ததும் மாணவிகள் தங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அங்கிருந்த தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அங்கு வந்த மாணவிகளின் குடும்பத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸார் பள்ளிக்கு சென்று அறை கண்காணிப்பாளராக செயல்பட்ட ஆசிரியர் சம்பத்குமாரை பிடித்து பல மணி நேரம் விசாரித்தனர். தொடர்ந்து தனியார் பள்ளி ஆசிரியர் மீது சம்பத்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.

x