புதுக்கோட்டை: ஆலங்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தவர் நல்லதம்பி.
இவர், ஒரு வாகனத்துக்கு ஆயுள் வரி செலுத்த வந்த நபரிடம் ரூ.3 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு, நான் செலுத்திவிடுகிறேன் என்று கூறி, வாகன உரிமையாளரை அனுப்பி வைத்ததாகவும், அதன்பிறகு அந்தத் தொகையை அரசுக்கு அவர் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பியை நேற்று பணியிடை நீக்கம் செய்து சென்னை வட்டார போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டார்.