எரிசாராயம் பதுக்கிய 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார், கடந்த பிப்ரவரி மாதம் பாப்பம்பட்டி ஸ்ரீநகரில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த 5,145 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த ஜான் விக்டர்(44), ரஞ்சித்குமார்(37), ஒண்டிப்புதூரைச் சேர்ந்த பிரபாகரன்(49) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின்பேரில், மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து மூவரும் சிறையில் குண்டர் தடுப்பு பிரிவில் அடைக்கப்பட்டனர்.

x