சென்னை: வாகன சோதனையின்போது ஆட்டோவில் நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுநர் வனச்சரக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பெருநகர காவல், B-3 கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (20.03.2025) மதியம் ஆர்பிஐ சுரங்கப்பாதை அருகே வாகன தணிக்கை பணியிலிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்து, சோதனை செய்த போது, ஆட்டோவில் சட்டவிரோதமாக 3 மூட்டைகளில் அரிய வகை 211 நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
அதன் பேரில் சட்டவிரோதமாக நட்சத்திர ஆமைகளை ஆட்டோவில் கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுநர் யாசின் என்பவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணைக்குப் பின்னர் பிடிப்பட்ட யாசின், 211 நட்சத்திர ஆமைகள், ஆட்டோ மற்றும் 1 செல்போனுடன் மேல் நடவடிக்கைக்காக வேளச்சேரி, வனச்சரக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.