பெல் கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.1.43 கோடி கொள்ளை: 6 ஆண்டுகளுக்குப் பின் ஒருவர் சிக்கினார்


திருச்சி: பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பெல் வளாகத்தில் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அன்று இந்த பெல் கூட்டுறவு சங்க அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல் வழியாக முகமூடி அணிந்த மர்ம நபர் உள்ளே புகுந்து, பெல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒரு கோடியே 43 லட்சத்தை திருடிச் சென்றார்.

இதுகுறித்து பெல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் இருந்தபோதும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகும் இவ்வழக்கில் துப்பு துலங்கவில்லை.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக ஒருவர் சிக்கியுள்ளதாகவும், அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

x