பெரம்பலூர் அதிர்ச்சி: பெட்ரோல் பங்கில் ரூ.28.46 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது


பெரம்பலூர்: நான்கு ரோடு பகுதியில் அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகரைச் சேர்ந்த கஜேந்திரன் (61), பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது பெட்ரோல் பங்கில், முதுநிலை மேலாளராக கடந்த 3 ஆண்டுகளாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கிளியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ச.சதீஷ் (37) பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த சில மாதங்களாக பெட்ரோல் பங்கின் வரவு- செலவு விவரங்களை உரிமையாளருக்கு சரிவர கணக்கில் காட்டாமல் ரூ.28,46,764-த்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிக்கந்தர் பாட்ஷா வழக்குப் பதிவு செய்து, சதீஷை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

x