அரியலூர்: கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் நேற்று உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ள அரங்கோட்டை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்தப் படுவதாகவும், விக்கிரமங்கலம் காவல் துறையினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டுகொள் வதில்லை எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், உண்மை என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனச்செல்வன், சிறப்பு உதவி ஆய்வாளர் வீராசாமி ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் நேற்று உத்தரவிட்டார்.