சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை: விருதுநகர் நபருக்கு 20 ஆண்டுகள் சிறை


விருதுநகர்: 17 வயது சிறுமியை கடத்திச் சென்று, திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுபாண்டி (44). இவர் பால் பாக்கெட் போடும் வேலை செய்து வந்தார். இவர் மற்றொரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மல்லாங்கிணர் போலீஸார் குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்து அழகுபாண்டியை கைது செய்தனர். வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அழகுபாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துமாரி ஆஜரானார்.

x