மதுரை: இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்திய ஆமை, பாம்பு, பல்லி உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து மதுரைக்கு வழக்கமாக நேற்று மதியம் வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தவர்களின் உடைமைகளை நுண்ணறிவு பிரிவினர் ஆய்வு செய்தனர். வேலூரை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை பரிசோதித்தபோது, ஒரு சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்த அரிய வகை ஆமைகள் -52, பல்லிகள் -4, குட்டி பாம்புகள்- 8, என மொத்தம் 64 வன உயினங்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இது தொட்பாக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளின் விசாரணையில், இலங்கையில் இருந்து புறப்படும் போது, ஒரு நபர் என்னிடம் இப்பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும், விமான நிலைய வாயிலில் இருக்கும் நபரிடம் கொடுக்குமாறு கூறியதால் பார்சலில் என்ன இருக்கிறது என்பது தெரியாது எனவும், கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து விமான நிலைய சுங்க நுண்ணறிவு பிரிவின் ஆமை, பாம்பு உள்ளிட்ட வன உயரினங்களைக் கைப்பற்றினர். வனத்துறையினர் ஆய்வின் அடிப்படையில் கடத்திய உயிரினங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் உயிரினங்கள் என்றும், இந்திய வன உயிரினங்கள் கிடையாது எனவும் உறுதி செய்யப்பட்டன. உரிய அனுமதியின்றி மதுரைக்கு கொண்டு கடத்தி வரப்பட்டதால் மீண்டும் இலங்கை நாடுக்கே அந்த உயிரினங்கள் திருப்பி அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என, விமான நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.