பிஹார்: பாகல்பூரில் உள்ள ஜகத்பூர் கிராமத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராயின் மருமகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகல்பூரில் உள்ள ஜகத்பூர் கிராமத்தில் உள்ள மத்திய அமைச்சர் நிதியானந்த் ராயின் மைத்துனர் ரகுநந்தன் யாதவின் வீட்டில் இன்று காலை இச்சம்பவம் நடந்துள்ளது.
நித்யானந்த் ராயின் இரண்டு மருமகன்களான ஜெய் ஜித் யாதவ் மற்றும் விஸ்வஜித் யாதவ் இடையே ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாடு கொலையில் முடிந்துள்ளது. இன்று காலையில் ஜெய் ஜித்துக்கு தண்ணீர் பரிமாறும் போது வீட்டு வேலைக்காரர் ஒருவர் தண்ணீரில் கையை நனைத்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதனால் ஜெய் ஜித் யாதவ் மற்றும் விஸ்வஜித் யாதவ் இடையே இடையே வாக்குவாதம் எழுந்தது.
தகராறு அதிகரித்த நிலையில், விஸ்வஜித் வீட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து ஜெய் ஜித்தை நோக்கி சுட்டார், இதனால் அவரது தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெய் ஜித், விகல் என்ற நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து, பதிலுக்குச் சுட்டதில் விகல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஸ்வஜித்தும் சம்பவ இடத்திலேயே இறந்தார், ஜெய் ஜித் ஆபத்தான நிலையில் பாகல்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக வந்து விசாரணையைத் தொடங்கினர். நவ்காச்சியா மற்றும் பர்பட்டா காவல்துறையினர் எஃப்எஸ்எல் நிபுணர்களை வரவழைத்து, ஆதாரங்களை சேகரித்து, சம்பவ இடத்தை வீடியோ எடுத்துள்ளனர். இதற்கிடையில், ரேஞ்ச் ஐஜி விவேக் குமார், இது தொடர்பாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு நவ்காச்சியா எஸ்.பிக்கு அறிவுறுத்தியுள்ளார்.