தேர்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை; கிருஷ்ணகிரியில் ஆசிரியரிடம் விசாரணை


கிருஷ்ணகிரி: தேர்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக முதுகலை ஆசிரியரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நேற்று நடந்த தேர்வின்போது, வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(44) என்பவர் தேர்வு மேற்பார்வையாளராக பணியில் இருந்தார். இந்நிலையில், இவர் தேர்வு எழுதிய ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான புகாரின் பேரில், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸார், ஆசிரியர் ரமேஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

x