புதுச்சேரி: லஞ்சம் வாங்கிய புகார் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஏஎஸ்ஐ மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் திருடு போன நகையை மீட்டுத்தர ஏஎஸ்ஐ சுப்பிரமணி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அவரது வாகனத்துக்கு ரூ.500 பெட்ரோல் போட்டு தருமாறும், மேலும் பொருள் வாங்குவதற்கு ரூ.1,500 பணமும் ஜிபே மூலம் பெற்றது அம்பலமானது. இது குறித்து டிஐஜிக்கு புகார் வந்தது. முதல் கட்ட விசாரணையில ஏஎஸ்ஐ லஞ்சம் வாங்கியது உறுதியானது.
இதையடுத்து லஞ்சம் வாங்கிய புகாரில் ஏஎஸ்ஐ சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து தலைமை செயலர் உத்தரவின் பேரில் வழக்கு லஞ்சம் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர் லஞ்சம் வாங்கியது (பிரிவு 7) மற்றும் 13 (2) ஆகிய 2 பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.