செங்குன்றம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறை தண்டனை கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி என்கிற ராஜமாணிக்கம் (72). இவர் கடந்த 2022-ம் ஆண்டு போக்சோ வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ராஜமாணிக்கத்தின் உடல்நிலை சமீபத்தில் மோசமானது என தெரிகிறது.
ஆகவே, ராஜமாணிக்கம் கடந்த 9-ம் தேதி சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ராஜமாணிக்கம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.