புதுச்சேரி துணிகரம்: கவரிங் நகையை மாற்றி வைத்து நூதனமுறையில் 15 பவுன் திருட்டு


புதுச்சேரி: வில்லியனூர் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (49). அண்மையில் திருக்காஞ்சி மாசி மக தீர்த்தவாரிக்கு நகைகளை அணிந்து செல்வதற்காக பாண்டியனின் மனைவி வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது, பீரோவில் வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 15 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பதையும், தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து விட்டு சென்றிருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பாண்டியன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைக்காமல் நகையை திருடி, அதற்கு பதிலாக கவரிங் நகையை வைத்துவிட்டு சென்றுள்ளதால், வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x