கும்பகோணம் | சிறுமியை திருமணம் செய்த இளைஞர்: உடந்தையாக இருந்த பெற்றோர் மீது வழக்கு


கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருப்பாலைத்துறையைச் சேர்ந்தவர் சுபாஷ்(22). இவர், திருப்பூருக்கு வேலைக்குச் சென்றபோது, அங்கு 16 வயது சிறுமியை காதலித்து, சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், இருவீட்டாரின் சம்மதத்துடன் 2024, செப்.16-ல் அந்தச் சிறுமியை சுபாஷ் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தச் சிறுமி தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் என குழந்தைகள் உதவி எண் 1098-க்கு ரகசியமாக புகார் வந்தது. இதையடுத்து, குழந்தைகள் உதவி எண் அதிகாரிகள் மற்றும் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ரா.சுபாஷ்(22) மீது போக்சோ சட்டத்தின் கீழும், சுபாஷின் பெற்றோரான ராஜேந்திரன்(56) - சுமதி(50) மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

x