தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல்: திருச்சியில் ஆண் குழந்தை உயிரிழப்பு


திருச்சி: தாய்பால் கொடுக்கும்போது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே உள்ள கள்வர்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள்(29). இவரது மனைவி தனலட்சுமி. இத்தம்பதிக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனலட்சுமி திருச்சி காந்தி மார்க்கெட், ஜெயில்பேட்டையில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு வந்தார்.

அங்கு மார்ச் 12-ம் தேதி மாலை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்தது. இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x