கோவில்பட்டி கொடூரம்: மகளுக்கு தொந்தரவு கொடுத்த தந்தை கைது


கோவில்பட்டி: புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் போத்தி நாராயணன்(43). இவரது 18 வயது மகள் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு போத்தி நாராயணன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். அந்த பெண் அளித்த புகாரின்பேரில் புதியம்புத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து போத்தி நாராயணனை கைது செய்தனர்.

x