திருச்சியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 16 வயது சிறுவன் கைது


திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், நேற்று முன்தினம் பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சிறுவனை நேற்று கைது செய்த போலீஸார், திருச்சியில் உள்ள சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

x