தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(70). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், தற்போது வட்டி தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் 34 வயது பெண் ஒருவர், செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.15,000 வட்டிக்கு கடன் கேட்டுள்ளார். இதையடுத்து, பணம் தருவதாகக் கூறி, ஆரோக்கியசாமி அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அந்த பெண் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
தொடர்ந்து, அப்பெண் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி ஆரோக்கியசாமியை நேற்று கைது செய்தனர்.