பாட்டி தலையில் கல்லை போட்டு கொன்ற பேரன் கைது: ராஜபாளையம் அருகே அதிர்ச்சி


ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியை சேர்ந்தவர் நவநீதன் மனைவி சரஸ்வதி(75). இவரது மகன் பாலசுப்பிரமணி அதே பகுதியில் வசித்து வருகிறார். பாலசுப்பிரமணி மகன் ஸ்ரீதர்(22) மது போதையில் அடிக்கடி தகராறு செய்ததால் சரஸ்வதி அவரை கண்டித்து வந்துள்ளார்.

நேற்று மாலை மது போதையில் வந்த ஶ்ரீதர், சரஸ்வதி உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். தகவலறிந்து வந்த போலீஸார் அவரது உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஶ்ரீதரை கைது செய்தனர்.

x