திருப்பத்தூரில் பிஸ்கட் தருவதாக 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை


ஆரோக்கியதாஸ்

திருப்பத்தூர்: 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

திருப்பத்தூர் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஆரோக்கியராஜ் (63). இவர், கடந்த 17-12-2022 இரவு 7 மணியளவில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை பிஸ்கெட் தருவதாக கூறி வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. இதில், ஆரோக்கியராஜ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூப்பிக்கப்பட்டதால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், அந்த தொகையை அவர் கட்ட தவறினால் கூடுதலாக ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மீனாகுமாரி நேற்று தீர்ப்பளித்தார்.

x