திருப்பூரில் குழந்தை திருமணம்: 17 வயது சிறுமி மீட்பு - போலீஸார் விசாரணை


திருப்பூர்: திருப்பூர் அருகே பெற்றோர்களால் திருமணம் செய்துவைக்கப்பட்ட 17 வயது சிறுமியை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மீட்டனர். திருப்பூரை மாவட்டம் பெருமாநல்லூர் அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக, 1098-க்கு புகார் வந்தது.

பெருமாநல்லூர் காவல் துறையினரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதில், 17 வயது சிறுமிக்கும், உறவினரான 25 வயது ஆணுக்கும் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்கவைத்தனர். இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளும், பெருமாநல்லூர் போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x