குடும்ப பிரச்சினையில் மன அழுத்தம்: உசிலம்பட்டி அருகே காவலர் தற்கொலை


மதுரை: உசிலம்பட்டி அருகே காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (35). அவனியாபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தார். இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கண்ணன் கடந்த சில மாதங்களாகப் பணிக்குச் செல்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வாலாந்தூர் போலீஸார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பப் பிரச்சினையால் கண்ணன் மன அழுத்தத்தில் இருந்த நிலையில், தற்கொலை செய்துள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x