கோவை மத்திய சிறையில் போக்சோ கைதி உயிரிழப்பு: போலீஸார் விசாரணை


கோவை: ரத்தினபுரியில் உள்ள ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் (38). இவர், கடந்த 2022ம் ஆண்டு கோவை அனைத்து மகளிர் கிழக்குப் பிரிவு போலீஸாரால், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையின், 7-வது பிளாக்கில் செந்தில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்குரிய மருந்துகளும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையி்ல், கடந்த 7ம் தேதி இரவு செந்தில் தனது அறையில் சுய நினைவின்றி கிடந்தார்.

இதைப் பார்த்த காவலர்கள் அவரை மீட்டு, சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவிக்குப் பின் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்தபோது, செந்தில் உயிரிழந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஜெயிலர் லதா அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரித்து வருகி்ன்றனர்.

x