தருமபுரி அரசு மருத்துவரிடம் தகராறு: கொலை மிரட்டல் விடுத்த 2 இளைஞர்கள் கைது


தருமபுரி: அரசு மருத்துவமனையில் மருத்துவரிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 6-ம் தேதி இரவு இவர் பணியில் இருந்தபோது, அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகளை பரிசோதனை செய்ய இடையூறாக சிலர் நின்றுள்ளனர். நகர்ந்து செல்லுமாறு அவர்களிடம் மருத்துவர் சீனிவாசன் கூறியுள்ளார். அப்போது அந்த நபர்கள் இருவரும் மருத்துவர் சீனிவாசனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் மருத்துவர் சீனிவாசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், நல்லம்பள்ளி வட்டம் பொம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த முனியேந்திரன் (25), திருப்பதி (30) ஆகிய இருவரும் மருத்துவர் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

x