சிவகங்கை: காளையார்கோவில் அருகே மர்மமான முறையில் இளைஞர் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லுவழி கிராமத்தில் தனியார் தோட்டத்தில் கல்லல் அருகே விசாலையன்கோட்டையைச் சேர்ந்த மாதங்கன் (24) என்பவர் தங்கி வேலை செய்து வந்தார். அதேபோல் அவருடன் சேர்ந்து 3 பேர் தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று மாதங்கன் தலையில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். காளையார்கோவில் போலீஸார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை யாரேனும் அடித்து கொன்றார்களா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாட்டரசன் கோட்டையில் பழைய ரயில் நிலையம் அருகே 40 வயதுள்ள பெண் ஒருவர், தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இது குறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.