மனைவியுடன் சண்டை; குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தை - சங்கரன்கோவில் கொடூரம்


தென்காசி: சங்கரன்கோவில் அருகே குடும்ப பிரச்சினையில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற தந்தையை, போலீஸார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த முத்துக்குமார், தனது 8 மாத குழந்தை செல்வ அரசிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதையடுத்து, அவரது மனைவி, குழந்தையை மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், முத்துக் குமாரை கரிவலம் வந்தநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.

x