அரசு வேலை வாங்கி தருவதாக போலி பணிநியமன ஆணை: தேனியில் ரூ.13 லட்சம் மோசடி


தேனி: கம்பம் சுருளிப்பட்டியைச் சேர்ந்த பொறியாளர் ஆனந்த பிரபு (39). அரசு வேலையில் சேர முயற்சித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது குடும்ப நண்பரான நந்தகுமார் மகள் அருண்யா (34) அரசு வேலை வாங்கித் தருவதாக தூத்துக்குடியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். இதை நம்பிய ஆனந்த பிரபு, பல தவணைகளில் ரூ. 13 லட்சம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், ஒரு நியமன ஆணையை வழங்கியுள்ளனர். விசாரணையில் இது போலி என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட குற்ற தடுப்புப் பிரிவு போலீஸில் ஆனந்த பிரபு புகார் செய்தார். சார்பு ஆய்வாளர் யாழிசை செல்வன் தலைமையிலான போலீஸார் கேரளாவில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர்.

x