திருப்பூர்: உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சுரேந்தர் சிங் (22), விவேக் (22). நண்பர்களான இருவரும், திருப்பூர் சேரன் நகரில் தனியே அறை எடுத்து தங்கி, பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் இருவருக்கும் வேலை இல்லாததால், மது அருந்தி உள்ளனர். இந்நிலையில், சுரேந்தர் சிங் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, மதுபோதையில் விவேக் சுற்றித் திரிந்துள்ளார். வீடு திறந்திருப்பதை கண்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, சுரேந்தர் சிங் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் திருமுருகன்பூண்டி போலீஸார் சென்று, சுரேந்தர் சிங் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், அறையில் உடன் தங்கி இருந்த விவேக்கை பிடித்து விசாரித்தனர். அப்போது இருவருக்கும் இடையே மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளதும், அப்போது கல்லை போட்டு கொலை செய்ததையும் விவேக் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கொலை வழக்கு பதிந்த திருமுருகன் பூண்டி போலீஸார், விவேக்கை கைது கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.