கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு: சிறுவன் கைது


கோவை: இருகூர் அத்தப்ப கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி ஜெயந்தி (41). இருவரும் நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றனர்.

பின்னர், மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இரு சிறுவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை திருடிக் கொண்டிருந்தனர். தம்பதியை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அதில் ஒருவரைப் பிடித்த தம்பதி, சிங்காநல்லூர் போலீஸில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்ட சிறுவன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதானவர் என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து வீட்டுப் பூட்டை உடைத்து, வீட்டிலிருந்த 13 பவுன் நகை, 100 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. சிறுவனை கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள மற்ற மூவரை தேடி வருகின்றனர்.

x