தூத்துக்குடி: சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் பகுதியை சேர்ந்த சிறுமியிடம் பழகி அதே பகுதியை சேர்ந்த வசந்த் (21) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இருவரும் தனியாக இருந்த போது எடுத்த வீடியோ தங்களிடம் உள்ளதாகவும் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்வோம் என அந்த சிறுமியை வசந்தின் நண்பர்களான பொன் முத்துக்குமார் (22), மதன் குமார் (21), சக்தி குமார் (29), பொன் மாடசாமி (28) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, வசந்த் உட்பட 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.