நெல்லை: புளியங்குடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சாம்பவர்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் (40) என்பவர் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த பள்ளியில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவர்கள் சிலருக்கு, ஆசிரியர் பிரான்சிஸ் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குழந்தைகள் நல அலுவலர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆசிரியர் பிரான்சிஸ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸா வழக்கு பதிவு செய்து, பிரான்சிஸை கைது செய்தனர்.