திருச்சி அதிர்ச்சி: மனநலம் குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது


திருச்சி: துவரங்குறிச்சி அருகேயுள்ள கிராமத்தில் மனநலம் குன்றிய 25 வயது பெண் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். விவசாய வேலைக்குச் சென்றிருந்த அப்பெண்ணின் தாத்தா- பாட்டி ஆகியோர் பிற்பகலில் வீடு திரும்பிய போது, அப்பெண்ணுக்கு வீட்டருகே வசிக்கும் பிக்சன் என்ற ராஜா (45) பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

ராஜாவுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இது குறித்து பெண்ணின் தாத்தா அளித்த புகாரின்பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

x