திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்: விழுப்புரம் இளைஞருக்கு விஷம் கலந்த தேநீர் கொடுத்த இளம்பெண்!


விழுப்புரம்: திருவெண்ணெய் நல்லூரில் இ-சேவை மையம் நடத்தி வந்த 23 வயது இளைஞரிடம், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நெருக்கமாக பழகி வந்தார். அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளைஞரிடம் கூறியதாகவும், அதற்கு அவர் மறுத்து அந்த பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அந்த இளைஞரை தனது வீட்டிற்கு வரவழைத்த இளம் பெண், அவருக்கு தேநீர் கொடுத்தார்.

அதை அருந்திய இளைஞர் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், இளைஞர் அருந்திய தேநீரில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இளம் பெண்ணும், அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகியுள்ளனர்.

x