அடிக்கடி வேலை சொன்ன தந்தை: இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மகன்; வீடியோ எடுத்த பயங்கரம்!


சென்னை: மிட்டாய் வியாபாரி இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஏழு கிணறு மின்ட் தெருவில் மிட்டாய் தயாரித்து, பெரிய ஸ்வீட் ஸ்டால்களுக்கு சப்ளை செய்யும் ராஜஸ்தானை சேர்ந்த ஜெகதீஷ் சங்கலா(42) இரும்புராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தந்தையை கொலை செய்து அதை வீடியோ எடுத்து உறவினருக்கு அனுப்பிவிட்டு, ரயிலில் தப்ப முயன்ற மகன் ரோகித்(18) சென்னை சென்ட்ரலில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தந்தை வேலை சொல்லி அடிக்கடி தொந்தரவு செய்ததால், அதில் ஆத்திரம் அடைந்த மகன் இவ்வாறு வெறிச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எழுகிணறு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x