மதுபோதையில் வெடித்த தகராறு: திண்டுக்கல் அருகே மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது


திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே காவேரி செட்டிபட்டியை சேர்ந்த முனியாண்டி (47) மகன் ரஞ்சித் (25). கூலித் தொழிலாளியான இவர்கள் இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தந்தை, மகனுக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில், தந்தை முனியாண்டி மகன் ரஞ்சித்தை தேங்காய் வெட்டும் அரிவாளால் வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து முனியாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

x