7 வயது சிறுமிக்கு திண்பண்டம் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை: திருவாரூர் முதியவர் போக்சோவில் கைது


திருவாரூர்: நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(69). இவர், 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு தின்பண்டம் வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை அளித்ததுடன், யாரிடம் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக்கு சென்ற சிறுமி திடீரென வாந்தி எடுத்தார். இதையடுத்து, சிறுமியிடம் பள்ளி தலைமை ஆசிரியர் விசாரித்தபோது, கிருஷ்ணமூர்த்தி பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ண மூர்த்தியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

x