ராமநாதபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை


ராமநாதபுரம்: பார்த்திபனூர் அருகே தடுத்தலான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் கண்ணன் (38). இவர் கடந்த 2023-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்த 13 வயதுடைய சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தார்.

பார்த்திபனூர் போலீஸார் இவர் மீது போக்சோ வழக்குப் பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கு, ராமநாதபுரம் விரைவு மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று விரைவு மகளிர் அமர்வு நீதிபதி கே.கவிதா, ரமேஷ் கண்ணனுக்கு போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் மற்றும் தீண்டாமை வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், சிறுமியை மிரட்டிய வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

x