சோளிங்கர்: சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட ஒரு அரசு பள்ளியில் படித்து வரும் 7-ம் வகுப்பு மாணவிக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஓய்வு பெற்ற அரசு நடத்துனர் கண்ணன் (68) என்பவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தர்வு தருவதாக பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சோளிங்கர் காவல் ஆய்வாளர் பாரதி தலைமையிலான காவல் துறை யினர் கண்ணனை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் கண்ணனை காவல் துறையினர் கைது செய்தனர்.