7ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: திருப்பூர் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை


திருப்பூர்: மடத்துக்குளம் வேடப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). கூலித் தொழிலாளி. இவர், கடந்த 2023-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார். இதையறிந்த சிறுமியின் தாயார், உடுமலை மகளிர் போலீஸில் புகார் அளித்தார். போக்சோ வழக்கு பதிந்து மணிகண்டனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி சுரேஷ் நேற்று தீர்ப்பளித்தார். அதில், மணி கண்டனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜமிலா பானு ஆஜரானார். கோவை மத்திய சிறையில் மணிகண்டன் அடைக்கப்பட்டார்.

x