திருச்சி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி செய்தவர் கைது


திருச்சி: உறையூர் பகுதியில் டிராவல்ஸ் அலுவலகம் நடத்தி வருபவர் திருவெறும்பூர் நொச்சிவயல் பகுதியைச் சேர்ந்த சண்முக சுந்தரம் (41). இவர், சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் மனைவி கிருஷ்ணவேணி (34) என்பவரிடம் அவரது கணவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூயுள்ளார். இதை நம்பிய கிருஷ்ணவேணி, சண்முக சுந்தரத்தின் வங்கி கணக்குக்கு ரூ.3.50 லட்சம் பணத்தை செலுத்தி உள்ளார்.

ஆனால், ராம் குமாருக்கு வெளிநாட்டில் வேலையும் வாங்கித் தராததுடன், பணத்தையும் சண்முக சுந்தரம் திருப்பி தரவில்லை. இதையடுத்து, கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில், உறையூர் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சண்முக சுந்தரத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

x