நீலகிரி: பந்தலூர் அட்டிப்பகுதியை சேர்ந்தவர் முரளி. கூடலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி விமலா ராணி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முரளி, பெயின்ட் கலவைக்கு பயன்படுத்தும் தின்னரை குடித்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மனைவியை மிரட்டியுள்ளார். அந்த தின்னரை விமலா ராணி பறித்து, முரளி மீது ஊற்றி தீ வைத்தார்.
உடல் முழுவதும் எரிந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் முரளியை மீட்டு பந்தலூர் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முரளி நேற்று உயிரிழந்தார். தேவாலா போலீஸார் வழக்கு பதிவு செய்து விமலா ராணியை கைது செய்தனர்.