வங்கி கணக்கில் தவறுதலாக அனுப்பிய ரூ.20.95 லட்சம் பணத்தை மோசடி செய்தவர்கள் மீது வழக்கு!


கோவை: வங்கி கணக்கிற்கு தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்ட பணத்தை மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

கோவை இடையர்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் முத்துராமன் (55). கடந்த அக்டோபர் மாதம் தனியார் நிறுவனம் சார்பில் தவறுதலாக வேறொரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு ரூ.20.95 லட்சம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, தனியார் நிறுவனம் சார்பில், தவறுதலாக அனுப்பிய பணத்தை திருப்பி தருமாறு அந்நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் கோரப்பட்டது.

வங்கி கணக்கில் பெறப்பட்ட பணத்தை 4 தவணைகளாக திருப்பித் தருவதாக உறுதி அளித்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரூ.8 லட்சம் மட்டுமே திருப்பி அளித்தனர். மீதமுள்ள பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதையடுத்து, கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் முத்துராமன் அளித்த புகாரின்பேரில், தீபக் லுனியா உள்ளிட்ட இருவர் மீது போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x