சென்னை: நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டினுள் காலணி வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, விஜய் தனது வீட்டில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார்.
அவரைக் காண தொண்டர்களும், ரசிகர்களும் வீட்டின் முன்பு குவிந்திருந்தனர். அப்போது, 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், குழந்தையின் காலணியை விஜய் வீட்டினுள் வீசினார். இதைக்கண்ட ரசிகர்களும், தொண்டர்களும் ஆத்திரமடைந்தனர். உடனே, விஜய் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்தபோலீஸார் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதையடுத்து,போலீஸார், அந்த இளைஞரை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.