திருமணமான 21 நாளில் சோகம்: சிவகங்கையில் இளம்பெண் தற்கொலை; போலீஸார் தீவிர விசாரணை


சிவகங்கை: உசிலம்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பூமிகாவுக்கும் (19), சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (29). என்பவருக்கும் பிப்.3-ம் தேதி திருமணம் நடந்தது. பூமிகா சிவகங்கையில் அரசு கல்லூரியில் படித்து வந்தார். திருமணமாகி 21 நாட்களே ஆன நிலையில் நேற்று முன்தினம் இரவு பூமிகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 21 நாட்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால், தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆயுஷ் வெங்கட்வாட்ஸ் விசாரணை நடத்தினார்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

x