பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை: ராமநாதபுரம் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்


ராமநாதபுரம்: திருப்புல்லாணி அருகே பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர் ராம் பிரகாஷ். இவர் பிளஸ் 1 மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

மாணவி புகாரின் பேரில், மாவட்ட இடை நிலைக் கல்வி அலுவலர் (பொ) கனக ராணி மற்றும் குழந்தைகள் நல அலுவலர் சிவகுமார் ஆகியோர் நேற்று பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் ராம் பிரகாசை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசு,நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

x