திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை: கணவன், மனைவிக்கு 20 ஆண்டு சிறை


திண்டுக்கல்: பழைய வத்தலக்குண்டு ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் அழகு ராஜா (32). திருமணமானவர். இவர் பெரியகுளத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2021-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

புகாரின் பேரில் தாமரைக்குளம் போலீஸார் அழகு ராஜா, அதற்கு துணையாக இருந்த அவரின் மனைவி ராம லட்சுமி (25) ஆகியோரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ரஷீதா ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

x