மதுரையில் மர அறுவை மில் உரிமம் புதுப்பிக்க லஞ்சம்: வன அலுவலர், காவலருக்கு 3 ஆண்டுகள் சிறை


மதுரை: மர அறுவை மில் உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் வன அலுவலர், காவலருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது தந்தை மர அறுவை மில் வைத்துள்ளார். இதற்கான உரிமத்தை புதுப்பிக்க கடந்த 2013ல் அருள்ராஜ், சோழவந்தான் வனச் சரக அலுவலர் இளஞ்செழியன், வனக் காவலர் சாமிநாதனை அணுகியுள்ளார். இருவரும் ரூ.20000 லஞ்சம் கேட்டுள்ளனர்.

இது குறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அருள்ராஜ் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் அருள்ராஜ் கொடுத்த ரசாயணம் தடவிய பணத்தை வாங்கும் போது இருவரையும் அங்கு மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பாரதிராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் இளஞ்செழியனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.3 ஆயிரம் அபராதம், சாமிநாதனுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.2500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

x