ஓசூரில் உறவினர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு: இளைஞர் கைது


கிருஷ்ணகிரி: ஓசூரில் உறவினர் வீட்டில் 18 பவுன் நகையைத் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமன்தொட்டி அருகே அட்டகுறுக்கியைச் சேர்ந்தவர்கள் ஷில்பா (23), விவேக் (30). உறவினர்களான இவர்கள் இருவரும் ஓசூர் நல்லூர் ராகுல் காந்தி நகரில் அடுத்தடுத்த வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஷில்பா, தினசரி வேலைக்கு செல்லும்போது, தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை விவேக்கிடம் கொடுத்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 22ம் தேதி ஷில்பா தனது வீட்டில் உள்ள நகைகளைச் சரி பார்த்தபோது, 18 பவுன் நகையை காணவில்லை.

இது தொடர்பான புகாரின் பேரில் நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சந்தேகத்தின் பேரில் விவேக்கிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஷில்பாவின் வீட்டுச் சாவியைப் பயன்படுத்தி வீட்டை திறந்து 18 பவுன் நகையை விவேக் திருடியது தெரிந்தது. இதையடுத்து, அவரைப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x